Thursday 22 September 2011

வலியின் விஞ்ஞானம்

வலி உண்மையில் நல்லது . நமது உடல் தன்னையே பாதுகாத்துக்கொள்ள ஏற்படுத்திக்கொண்ட ஒரு காப்பு அமைப்பே வலி ஆகும்.

வலி என்ற ஒன்று மட்டும் இல்லையென்றால் ,
1 . தெரியாமல் அடுப்பில் கை வைத்து தீக்காயம் ஏற்பட்டாலும் தெரியாது 
2 . கூர்மையான  பொருள் குத்தி இரத்தம் வழிந்தாலும் தெரியாது 
3 . அடித்தாலும் தெரியாது , அனைத்தாலும் தெரியாது 

ஆம்.
வலி என்பது தொடு உணர்ச்சியின்  உச்ச நிலை தானே .

வலி எவ்வாறு ஏற்படுகிறது ?

                   நரம்பு முடிகின்ற நரம்பு முனைகள் மிகவும் நுட்பமானது , சிறு அளவிலான உணர்வுகளைக் கூட மூளைக்கு மின் சமிக்கைகளை அனுப்பி இந்த குறிப்பிட்ட இடத்தில் இந்த அளவில் இவ்வளவு வலி என்று தகவல் அனுப்புகிறது. மூளை அதை புரிந்துக் கொண்டு வலியை உணரச்செய்கிறது . 

வலி நல்லதா?

              
                    ஆம் . உணமையில் வலிப்பது நல்லது தான். நம் உடல் இறைவனின் மிக உன்னத , நுட்பமான , தானியங்கிக் கொள்ளகூடிய அருமையான படைப்பு . அது நம் உடலில் ( செல்களில் ஏற்படும் அசாதாரண மாறுதல்களை , தீங்கு விளைவிக்ககூடிய மாற்றங்களை வலிப்பதன் மூலமாக கவனத்தை ஈர்த்து அந்த குறைபாட்டை சரி செய்ய தனக்குதானே சொல்லி சரி செய்ய வைக்கிறது. 
அதாவது செல் பாதிக்கப்படும்போது Prostaglandins  எனப்படும் வேதிப்பொருள் சுரக்கசெய்கிறது . இது  செல்லை வீங்கச்செய்கிறது . இந்த வீக்கம் , நரம்பு முனைகளை தூண்டி வலி சமிக்கைகளை மூளைக்கு அனுப்பச்செய்கிறது . இந்த வலியின் அளவு , செல்லின் பாதிப்பையும் சுரக்கப்படும் Prostaglandins அளவையும் பொறுத்தது. 

வலி நிவாரணியின் பங்கு:

 
          
                       வலி நல்லது தான் என்றாலும் , வலி தரும் வலி தாங்கிக்கொள்ள முடியாது தான். அதிலிருந்து தப்பிக்க Ibuprofen , Asprin,acetaminophen,  naproxen sodium போன்ற NSAIDs (Non-steroidal anti-inflammatory drug )  வலி நிவாரணிகளை உபயோகித்து தப்பித்துக்கொள்கிறோம்.
இவை என்ன செய்கிறதென்றால் , Prostaglandins  சுரப்பதை மிகவும் குறைத்துவிடுகிறது .. அதனால் நரம்பு முனைகள் வலியை மூளைக்கு தெரியபடுத்துவதில்லை. அதனால் நாமும் வலியை உணர்வதில்லை .

" வலி போயே போச்சே "
.
கவனிக்கவும்..... செல்லில் ஏற்பட்ட பதிப்பு அப்படியே தான் இருக்கிறது . வலி மட்டும் தன இல்லை. அது நல்லா தான் இருக்கும், ஆனால் நல்லதில்லை ...

எத்தனை வலி மாத்திரைகள் வந்தாலும் வலி நிவாரணிகள் வந்தாலும் காதலால் இதயத்தில் பட்ட வலிகளை மட்டும் மாற்ற முடியாது.....